» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் சட்ட கல்லூரி மாணவர் கொலையில் முக்கிய குற்றவாளி கைது

புதன் 14, பிப்ரவரி 2018 4:47:25 PM (IST)

உத்தரப் பிரதேசத்தில் தலித் சட்ட கல்லூரி மாணவர் தீலிப் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அலகாபாத் பல்கலைகழகத்தில் 2ம் ஆண்டு சட்டம் பயின்று வந்தா மாணவர் திலீப். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த பகுதியில் ஒட்டலுக்கு சாப்பிட சென்றார். ஓட்டலுக்கு வெளியே அவருக்கு அந்த பகுதிக்கு வந்த ஒரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அந்த கும்பல் திலீப் கடுமையாக தாக்கினர். படுகாயம் அடைந்த திலீப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

சிகிச்சை பலன் இன்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனையடுத்து உத்தரப் பிரதேச போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குவாளிகளை தேடி வந்தனர். மேலும் 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விஜய் சங்கர் சிங்கை இன்று காலையில் உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர். கும்பலால் படுகொலைப்பட்ட திலீப் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பாக நிதி உதவியாக ரூ.20 லட்சத்தை அம்மாநில முதல்வர் வழங்கியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers


crescentopticals




New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory