» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் பஸ் கட்டணம் உயருகிறது: அமைச்சரவை ஒப்புதல்

புதன் 14, பிப்ரவரி 2018 4:11:26 PM (IST)

கேரளாவில் பஸ் கட்டணத்தை உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி குறைந்தபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக உயருகிறது.

கேரளாவில் கடைசியாக பஸ் கட்டணம் 2014 மே மாதத்தில் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அங்கு பஸ் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தனியார் பஸ் நிறுவனங்கள் பயண கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இறுதியாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் இம்மாதம் 16ம் தேதி முதல் பஸ்களை இயக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தனது கூட்டணி கட்சிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

அதில் பஸ் கட்டணத்தை உயர்த்த கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இன்று பினராய் விஜயன் தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பஸ் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி சாதரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாகவும், விரைவு பேருந்துகளில் 10-லிருந்து 11 ரூபாயாகவும், சூப்பர் பாஸ்ட் பேருந்துகளில் 13-லிருந்து 15 ரூபாயாகவும், சூப்பர் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் 20-லிருந்து 22 ரூபாயாகவும் சூப்பர் டீலக்ஸ் பஸ்களில் 28-லிருந்து 33 ரூபாயாகவும், வால்வோ பேருந்துகளில் 40-லிருந்து 45 ரூபாயாகவும் உயருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Johnson's Engineers


crescentopticals







Thoothukudi Business Directory