» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் காதலை ஏற்க மறுத்த எம்.பி.ஏ. மாணவிக்கு கத்தி குத்து : கிரேன் ஆப்ரேட்டர் கைது

புதன் 14, பிப்ரவரி 2018 3:47:35 PM (IST)

ஆந்திராவில் தனது காதலை ஏற்க மறுத்த எம்.பி.ஏ. மாணவியை கத்தியால் தாக்கியதுடன் அவரை காப்பாற்ற வந்த 3 பேரையும் தாக்கிய கிரேன் ஆப்ரேட்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து ஆந்திர போலீசார் கூறியதாவது: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி வருபவர் பிரகாஷ். இவர் அந்த பகுதியில் எம்.பி.ஏ. மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது காதலை அந்த மாணவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பிரகாஷின் காதலை அந்த மாணவி நிராகரித்து விட்டார். 

இதனால் கோபம் அடைந்த பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மாணவியின் கழுத்தில் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த அருகில் 3 பேர் அந்த மாணவியை காப்பாற்ற வந்தனர். அவர்களையும் பிரகாஷ் கத்தியால் தாக்கி உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி போலீசாரிடம் கொடுத்த புகாரில் கடந்த சில நாட்களாக பிரகாஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்று கூறியுள்ளார். காயம் அடைந்த மாணவி உள்பட 4 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

CSC Computer Education


New Shape Tailors



Thoothukudi Business Directory