» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ.12 ஆயிரம் கோடி மோசடி பரிவர்த்தனை

புதன் 14, பிப்ரவரி 2018 3:24:25 PM (IST)

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி பரிவர்த்தனை  நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் சிலர் வங்கிகளில் மோசடி பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இதனை தடுக்க மத்திய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ரிசர்வ் வங்கியும் இதுதொடர்பாக வங்கிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதனால் வங்கிகள் அனைத்து சந்தேகத்துக்குரிய கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றன. 

இந்நிலையில், பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி தனது மும்பை கிளையில் குறிப்பிட்ட சில கணக்குகளில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதை கண்டுபிடித்துள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் இந்த மோசடி பரிவர்த்தனைக்கு வெளிப்படையாகவே உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் சம்பந்தபட்ட வங்கி கணக்கு மற்றும் வாடிக்கையாளர்கள் குறித்த தகவலை பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிடவில்லை.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD




New Shape Tailors

crescentopticals

Joseph Marketing






Thoothukudi Business Directory