» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திர பிரதேசத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால்.... ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை

புதன் 14, பிப்ரவரி 2018 12:01:08 PM (IST)

ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்றால் தனது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஜெகன் மோகன் ரெட்டி இது குறித்து கூறியதாவது: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி மார்ச் 5 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில் ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி உறுப்பினர்கள் போராடுவார்கள். பட்ஜெட் கூட்டத் தொடருக்குள் ஆந்திர பிரதேசத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்றால் ஏப்ரல் 6ம் தேதியன்று எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வாhர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அதேசமயம் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் உள்ள தனது உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்களா அல்லது மக்களவை உறுப்பினர்கள் மட்டும் பதவியை ராஜினாமா செய்வார்களா என்பதை ஜெகன் மோகன் ரெட்டி தெளிவாக குறிப்பிடவில்லை. கடந்த ஆண்டும் இது போன்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing



crescentopticals





Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors



Thoothukudi Business Directory