» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசு மானியம் கிடைக்கவில்லை: மேற்கு வங்கத்தில் பிச்சையெடுத்து கழிவறை கட்டும் மூதாட்டி

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 3:46:17 PM (IST)



மேற்கு வங்கத்தில் அன்றாட வாழ்க்கையை பிச்சை எடுத்து சமாளித்து வரும் 75 வயது மூதாட்டி ஒருவர் தனது வீட்டில் கழிவறை கட்டி வருகிறார்.

மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்டம் நவ்தாபாரா கிராமத்தில் வசித்து வருபவர் ரஹிமா பீவா (75). இவர் தனது மகள் கமலா பீவாவுடன் (50) வசித்து வருகிறார். குமலா பீவா மாற்றுத் திறனாளி. 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் இறந்து விட்டதால் வேறு வழியின்றி பிச்சையெடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். ரஹிமா பீவா இதுவரை தனது வாழ்நாளில் திறந்த வெளியில்தான் இயற்கை உபாதையை கழித்து வந்தார். 

இந்நிலையில் திறந்தவெளியில் மலம் கழிப்பது உடல்நலத்துக்கு கேடு என்று அருகில் இருந்தவர்கள் ரஹிமா பீவாவிடம் அறிவுறுத்தினர். இதனையடுத்து தனது வீட்டில் கழிவறை கட்ட முடிவு செய்தார். கழிவறை கட்ட சுமார் ரூ.15 ஆயிரம் தேவைப்பட்டது. இருப்பினும் பணம் அவரது முடிவை மாற்றவில்லை. பிச்சையெடுத்து சேர்த்து வைத்து இருந்த பணத்தை கொண்டு கழிவறை கட்டுவதற்காக மண் மற்றும் செங்கல் போன்றவற்றை வாங்கி விட்டார். கொத்தனார்களை வைத்து தற்போது கழிவறை கட்டும் பணியை தொடங்கி விட்டார். 

கழிவறை கட்டி முடித்த பிறகு அவர் வசித்து வரும் மண் வீட்டில் செங்கல்களால் கட்டப்பட்ட முதல் கட்டிடமாக இது இருக்கும். சில காரணங்களால் கழிவறை கட்டுவதற்கு மாநில அரசு வழங்கும் மானியத்தை பெறுவதற்கான தகுதிகள் அவருக்கு இல்லாததால் மானிய தொகையும் கிடைக்கவில்லை. இருப்பினும் அரசு சார்பான உதவிகள் கிடைக்க என்ன செய்ய முடியுமோ அதனை அவருக்கு செய்வோம் என்று சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

நண்பன்Feb 13, 2018 - 04:14:21 PM | Posted IP 61.2.*****

இது தான் கார்பொரேட் ஆதரவு அரசின் சாதனை.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

crescentopticals



Joseph Marketing





Thoothukudi Business Directory