» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராணுவம் குறித்த பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 3:32:55 PM (IST)

ராணுவம் குறித்து கூறிய கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பகுஜன் ஜமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

முசாப்பர் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில் "நாட்டுக்கான போரிட வேண்டிய நிலை ஏற்பட்டால் எல்லைகளுக்க படைகளை அனுப்ப ராணுவத்துக்கு 7 மாதங்கள் ஆகும். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் 3 நாட்களில் எல்லைகளுக்கு படைகளை அனுப்ப முடியும்" என்று கூறினார். மோகன் பாகவத் கருத்துக்கு  எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: "ராணுவத்துடன் ஆர்.எஸ்.எஸ்.-ஐ ஒப்பிடுவது கலகத்தை ஏற்படுத்துவது மற்றும் அவமானம் படுத்துவதற்கு சமமாகும். எனவே மோகன் பாகவத் ராணுவம் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். படை மீது நம்பிக்கை இருந்தால் அவருக்கு அரசு செலவில் கமாண்டோ படைகள் ஏன்?" இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

selvakumarFeb 14, 2018 - 01:31:26 PM | Posted IP 103.2*****

ஆர் எஸ் எஸ் மக்கள் ராணுவம்

makkamFeb 13, 2018 - 05:54:58 PM | Posted IP 122.1*****

சபாஷ் மாயாவதி மேடம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing

CSC Computer Education

crescentopticals



Thoothukudi Business Directory