» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எங்கள் வீடுகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை ஒரு திட்டமிட்ட நாடகம்: ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

சனி 13, ஜனவரி 2018 4:04:23 PM (IST)

ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரத்தில் எங்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை அமலாக்கத்துறையால் நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட நாடகம் என்றும், எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.  இந்த சோதனை குறித்து புது டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

வழக்கின் அடிப்படையில் இன்று சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த காவல்நிலையத்திலுமோ, சிபிஐ போன்ற அமைப்பிலுமோ வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.  ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது. ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரத்தில் எங்கள் வீடுகளில் இதுவரை 3 முறை சோதனை நடத்தப்பட்டது. 

வருமான வரித்துறையினர் சோதனைக்கான அனுமதி ஆணையை காண்பித்தனர். இன்று டெல்லியில் உள்ள வீட்டின் சமையல் அறை, படுக்கை அறை என பல அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதிகாரிகள் அனைவரும் மரியாதையுடன் நடந்து கொண்டனர். சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் கீழ் அமலாக்கத் துறை சோதனை ஒரு திட்டமிட்ட நாடகம். 2012-13 கால கட்டத்தில் ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் வாசித்த சில அறிக்கைகள் அடங்கிய காகிதங்களை எடுத்து சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors


Universal Tiles Bazar





selvam aqua

Johnson's Engineers





Thoothukudi Business Directory