» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பரீட்சைக்கு செல்வதாக கூறி விட்டு சென்று காதல் திருமணம் செய்த மாணவி சிக்கினார்!!

வியாழன் 11, ஜனவரி 2018 3:26:14 PM (IST)

பரீட்சைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற மாணவி காதலனை திருமணம் செய்து கொண்டார். காதலனை கண்டுப்பிடித்த பெற்றோர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் அஜய் சென் என்ற இளைஞருக்கும் அவர் வீட்டு அருகில் வசிக்கும் 22 வயதான பாலிடெக் மாணவிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதையறிந்த மாணவியின் பெற்றோர் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன் காதலரை தங்கள் பெண் சந்திக்க முடியாதபடி பார்த்து கொண்டனர். இந்நிலையில், பாலிடெக்னிக் பரீட்சை எழுத செல்வதாக தனது வீட்டில் கூறி விட்டு சென்ற மாணவி அஜய்யை நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் தங்களது திருமண சான்றிதழை பெற அஜய் நீதிமன்றத்துக்கு வந்த போது அங்கு இருந்த மாணவியின் குடும்பத்தார் அஜய்யை கடத்தி ஒரு இடத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தரப்பட அஜய்யை அவர்கள் மீட்டார்கள். மாணவியின் பெற்றோர், இரண்டு சகோதரர்கள், உறவினர்கள் என பலர் அஜய்யை தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar

New Shape Tailors



Johnson's Engineers






selvam aqua




Thoothukudi Business Directory