» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கார் மோதி 67 வயது மூதாட்டி பலி: கிரிக்கெட் வீரர் ரஹானேவின் தந்தை கைது!

வெள்ளி 15, டிசம்பர் 2017 5:07:38 PM (IST)

கார் விபத்தில் மூதாட்டி உயிரிழந்தது எதிரொலியாக, பிரபல கிரிக்கெட் வீரர் ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானேவை (54) போலீசார் இன்று கைது செய்துள்ளது.

மஹாராஷ்டிராவில் உள்ள தர்கர்லி கடற்கரைக் கிராமத்துக்குச் செல்வதற்காக புனே - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோல்ஹாபூர் வழியாகத் தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார் மதுகர். இன்று காலையில் கோல்ஹாபூரின் காகல் பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருந்த வயதானப் பெண்மணி மீது மதுகர் ஓட்டி வந்த கார் பலமாக மோதியது. 

இதில் படுகாயமடைந்த ஆஷாதய் கம்ப்ளே என்கிற 67 வயதுப் பெண் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ரஹானாவின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticalsJoseph Marketing
New Shape TailorsThoothukudi Business Directory