» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

செல்போன் எண் - ஆதார் இணைப்புக்கு மார்ச் 31 வரை அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!!

வெள்ளி 15, டிசம்பர் 2017 11:38:51 AM (IST)

செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது மற்றும் நலத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மத்திய அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 2018 மார்ச் 31 வரை ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அவகாசம் அளித்ததை, இன்று உச்சநீதிமன்றம் ஏற்றது. இதன் மூலம் பான், வங்கிக்கணக்கு, கைபேசி எண்ணுடன் ஆதாரை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

அரசு நலத் திட்ட உதவிகளுக்கும் ஆதார் எண் இணைப்பை மார்ச் 31க்குள் செயல்படுத்திக்கொள்ளலாம். அதேநேரம், ஆதாரை இணைக்க மக்களை கட்டாயப்படுத்த கூடாது. இப்போது ஆதார் வைத்துள்ளோர் மட்டும் வங்கி கணக்குகளில் அதை இணைத்துக்கொள்ளலாம். புதிதாக ஆதார் பெற வேண்டியவர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

Johnson's EngineersThoothukudi Business Directory