» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நகர்புற ஏ.டி.எம் மையங்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது: மத்திய அரசு உத்தரவு

வெள்ளி 15, டிசம்பர் 2017 11:20:19 AM (IST)

நகர்புறங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

ஏ.டி.எம்களுக்கு பணம் நிரப்ப, பணம் எடுத்துச்செல்லும் வாகனங்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை கருத்தில் கொண்டு, நகர்புறங்களில் இரவு 9 மணிக்கு மேலும், கிராமப்புறங்களில் மாலை 6 மணிக்கு மேலும் பணம் நிரப்பக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

அதேபோல், வங்கிகளில் இருந்து பணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், ஒவ்வொரு நாளும் மதியத்துக்கு முன்பே வங்கிகளில் இருந்து பணத்தை பெற்றுவிட வேண்டும். ஒரு வாகனத்தில் ரூ.5 கோடிக்கு மேல் எக்காரணத்தை கொண்டும் பணத்தை எடுத்துச்செல்லக்கூடாது.

ரூ.5 லட்சத்துக்கு மேல் பணத்தை எடுத்துச்செல்லும் போது பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிரத்யேக வாகனத்தில் செல்ல வேண்டும் என்பன போன்ற மேலும் சில விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.இந்த பரிந்துரைகள் மத்திய சட்ட அமைச்சக அனுமதிக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar

New Shape Tailors
Johnson's Engineers

selvam aqua
Thoothukudi Business Directory