» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கம்...நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 14, டிசம்பர் 2017 3:55:41 PM (IST)

விஜய் மல்லையாவின் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பாலான சொத்துக்களை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பு செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார்.  அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த சிபிஐ தரப்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில், விஜய் மல்லையாவிற்கு கடன் கொடுத்த 12 வங்கிகள் அதே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அதில், இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கி வைத்து தங்களுக்கான கடன் தொகையை பெற்றுத்தரும் படி கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பாலான சொத்துக்களை இங்கிலாந்து நீதிமன்றம் முடக்கியது. இங்கிலாந்தில் விஜய் மல்லையா ஆரஞ்சு இந்தியா கோல்டிங்ஸ், யுனைடெட் மது நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். மேலும், இங்கிலாந்து விர்ஜின் தீவுகளிலும் அவருக்கு சொந்தமாக இடங்கள் உள்ளது. இவற்றின் பெரும் பகுதிகளைத்தான் நீதிமன்றம் முடக்கியுள்ளது.


மக்கள் கருத்து

உண்மைDec 14, 2017 - 06:01:30 PM | Posted IP 122.1*****

மோடி வச்சார் ஆப்பு! ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals





Thoothukudi Business Directory