» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மது அருந்துவோருக்கு குறைந்தபட்ச வயது வரம்பு அதிகரிப்பு : கேரளா அரசு முடிவு

புதன் 6, டிசம்பர் 2017 8:44:17 PM (IST)

மது அருந்துவோருக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 21-ல் இருந்து 23-ஆக அதிகரிக்க கேரளா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கேரளா மாநிலத்தில் தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கை தளர்த்தி வருகிறது. கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மது குடிப்போருக்கான குறைந்தபட்ச வயது வரம்பை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.கூட்டத்தில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அப்போது மது குடிப்போருக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 21-ல் இருந்து 23-ஆக அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Universal Tiles Bazar

Johnson's Engineers


selvam aqua


Nalam Pasumaiyagam

New Shape Tailors




Thoothukudi Business Directory