» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேசிய கீதத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு : காஷ்மீரில் 2 மாணவர்கள் மீது வழக்கு பதிவு

வியாழன் 23, நவம்பர் 2017 5:46:18 PM (IST)

காஷ்மீரில் தேசிய கீதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் பட்ஷா என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சில் ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. அப்போது, தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இரு மாணவர்கள் அவமதித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தேசிய கீதத்தை அவமதித்த இரண்டு மாணவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேசிய கீதம் அவமதிக்கப்பட்ட சம்பவம் பற்றி விசாரணை நடைப்பதாகவும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஷா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் என்.என்.வோரா தலைமை விருந்தினராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers

selvam aqua


Universal Tiles BazarNew Shape Tailors

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory