» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ் - பட்டேல்கள் அமைத்திருப்பது ஒரு மோசடி கூட்டணி : அருண் ஜெட்லி விமர்சனம்

வியாழன் 23, நவம்பர் 2017 3:54:11 PM (IST)

குஜராத்தில் இடஒதுக்கீடு வழங்க சாத்தியமில்லை என்று தெரிந்தும் காங்கிரஸ் - பட்டேல் குழு மோசடி கூட்டணி  அமைத்து நாடகம் ஆடுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்து உள்ளார்.

குஜராத்தில் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதில், பா.ஜ.க.,வை தோற்கடிக்க காங்கிரஸ் - பட்டேல் போராட்டக்குழுவின் ஆதரவினை பெற்றுள்ளது. பட்டேல்கள் தங்களுக்கு போதுமான இடஒதுக்கீடு இல்லை என்று குஜராத்தில் ஆளும் பா.ஜ.க.,வை எதிர்த்து போராட்டம் நடத்திவந்தனர்.

இந்நிலையில், பட்டேல் போராட்டக்குழு தலைவர் ஹர்திக் பட்டேல், காங்கிரஸ் தங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்ததாகவும், இடஒதுக்கீடு வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளதால் காங்கிரஸிற்கு தேர்தலில் ஆதரவு வழங்க இருப்பதாகவும் நேற்று அறிவித்தார். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் - பட்டேல்கள் அமைத்திருப்பது ஒரு மோசடி கூட்டணி. இனி சட்டப்படியும், அரசியலமைப்பும் படியும் இடஒதுக்கீடு சாத்தியமில்லை என்று தெரிந்தும், மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே இவர்கள் இணைந்துள்ளார்கள்.

உச்சநீதிமன்றத்தின் சட்ட வரைவுபடி,ஒரு மாநிலத்திற்கு 50 சதவிகிதம் மட்டுமே இடஒதுக்கீடு சாத்தியம் என்று அவர் தெரிவித்து உள்ளார். மேலும், இதன் காரணமாகவே குஜ்ஜார்களுக்கு ராஜஸ்தானில் இடஒதுக்கீடு சதவிகிதம் அதிகப்படுத்த முடியாமல் இருக்கிறது. இது தெரிந்தும் காங்கிரஸ் - பட்டேல் தலைவர்கள் மக்களை ஏமாற்றத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திரமோடியை டீ விற்பவர் என்று இளைஞர் காங்கிரஸ் விமர்சித்து இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அருண் ஜெட்லி, யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று இந்திய ஜனநாயகம் அனுமதித்து இருக்கிறது. அதே சமயம் பெரிய குடும்பத்தில் இருந்து வருபவர்கள் மட்டும் தான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ஜனநாயகத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. காங்கிரஸ் இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரு போதும் இது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று காட்டமாக விமர்சித்து உள்ளார்.


மக்கள் கருத்து

பாஸ்Nov 24, 2017 - 05:00:34 PM | Posted IP 61.2.*****

மரண பயம் கண்ணுல தெரியுதே சூணா பாணா .........

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph MarketingThoothukudi Business Directory