» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இரட்டைஇலை தொடர்பான தீர்ப்பு முன்கூட்டியே தரப்பட்டதா ? : தினகரன் வழக்கறிஞர் புகார்

வியாழன் 23, நவம்பர் 2017 2:32:53 PM (IST)

இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு முன்கூட்டியே தரப்பட்டதா என தேர்தல் ஆணையத்தின் மீது தினகரன் தரப்பு வழக்கறிஞர் மொகித் பால் புகார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, அதிமுக இரு பிரிவாக பிரிந்தது.இதனால் அதிமுக பெயரையும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தவும் தேர்தல்ஆ ணையம் தடை விதித்தது. இது தொடர்பாக இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

இந்நிலையில் இன்று அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு ள்ள தாகவும் இது சரியான முடிவு என்று முதல்வர் பழனிச்சாமி செய்தி யாளர்க ளிடம் தெரிவித்தார்.இதை தொடர்ந்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் மொகித்பால், இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு முன்கூட்டியே தரப்பட்டதா என தேர்தல் ஆணையத்தின் மீது புகார் தெரிவித்தார். மேலும் தீர்ப்பு தொடர்பாக தகவல் தங்களுக்கு வழங்காதது ஏன் என்றும் தினகரன் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNew Shape Tailors

crescentopticals
Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing
Thoothukudi Business Directory