» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியை விமர்சித்து காங்கிரஸ் சர்ச்சை மீம்: பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!!

புதன் 22, நவம்பர் 2017 12:20:07 PM (IST)பிரதமர் மோடியை விமர்சித்து காங்கிரஸ் இளைஞர் அணி வெளியிட்ட சர்ச்சை விளம்பரத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இளைஞர் காங்கிரஸ் கட்சியானது யுவதேஷ் என்ற பெயரில் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோர் ஒன்றாக புகைப்படத்தில் நிற்கின்றனர். அதில், தெரசா மே, மோடியிடம், நீங்கள் சென்று டீ விற்பனை செய்யுங்கள் என கூறுவதாக பதிவாகியுள்ளது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து உடனடியாக மீம் நீக்கப்பட்டும் விட்டது. 

காங்கிரஸ் கட்சியின் இந்த டுவிட்டரால் பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மத்திய அமைச்சர்கள் டுவிட்டர் வழியே கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், இதுபோன்ற டுவிட்டர் செய்திகளால் ஏழைகளுக்கு எதிரான தனது மனநிலையை காங்கிரஸ் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. வரும் தேர்தல் அவர்களுக்கு உண்மையான சோதனையாக இருக்கும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து ஜே.பி. நட்டா, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் தங்களது கண்டன கருத்துகளை டுவிட்டர் வழியே தெரிவித்துள்ளனர். எனினும், இதுபோன்ற மீம்களை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம். காங்கிரஸ் கட்சியானது பிரதமர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் மரியாதை அளிக்கும் கலாசாரத்தினை கொண்டுள்ளது என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த டுவிட்டர் தகவல் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்த கூடும் என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsJoseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors
Thoothukudi Business Directory