» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை? வங்கி காசோலை முறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்!!

புதன் 22, நவம்பர் 2017 11:49:11 AM (IST)

டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக வங்கி காசோலைகளை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீண் கந்தேல்வால் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 100டி நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்யும் அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதோடு லட்சக்கணக்கான பணப்பரிவர்த்தனையில் நாட்டு மக்கள் சிக்கித் தவித்தனர்.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல அடுத்த அதிரடியான திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் பிரவீண் கந்தேல்வால் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வங்கிகளில் பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் காசோலைகளுக்கு மத்திய அரசு முழுவதும் நிறுத்தக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற டிஜிட்டல் ரத் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.

அரசு ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்காகவே ரூ. 25 ஆயிரம் கோடி செலவு செய்கிறது, இதில் ரூ. 6 ஆயிரம் கோடியானது பாதுகாப்பு அம்சங்களுக்காக செலவிடப்படுகிறது. ஆனால் வங்கிகள் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தணைக்கு ஒரு சதவீதமும், கிரெடிட் கார்டை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தணைக்கு 2 சதவீதமும் மட்டுமே கட்டணம் வசூலிக்கின்றன. அரசு இந்த பரிவர்த்தணையை ஊக்குவிக்கும் வகையில் கட்டணத்தை குறைக்க வங்கிகளுக்கு மானியம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதைய நிலவரப்படி 95 விழுக்காட்டு வர்த்தக நடவடிக்கைகள் ரூபாய் நோட்டுகள் அல்லது காசோலைகள் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. 

மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை

எனவே காசோலைகளுக்கும் மூடுவிழா கண்டால் மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகவே இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பணமதிப்பிழப்பிற்குப் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 100 கோடியை எட்டிய மின்னணுப் பரிமாற்றத்தின் எண்ணிக்கை, தற்போது 87 கோடி என்ற அளவில் நிலைபெற்றிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பிற்குப் பிறகு டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைகள் பெருமளவில் வளர்ச்சியடையவில்லை. எனினும் நவம்பர் 8, 2016க்கு முன்பு இருந்த நிலைமையை விட உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து

உண்மைNov 23, 2017 - 06:51:00 PM | Posted IP 122.1*****

ஜெய் ஹிந்த்!

நிஹாNov 22, 2017 - 11:58:47 AM | Posted IP 103.2*****

டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அரசுக்கு ரூபாய் அச்சடிக்கும் செலவு மிச்சமாகும் போது, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 2 % கட்டணத்தை நாங்கள் ஏன் கட்ட வேண்டும்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Adsselvam aqua

Universal Tiles Bazar


New Shape TailorsJohnson's Engineers

Nalam PasumaiyagamThoothukudi Business Directory