» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலக அழகியின் பெயரை கிண்டல் அடித்ததால் சர்ச்சை : மன்னிப்பு கோரினார் சசிதரூர்!

செவ்வாய் 21, நவம்பர் 2017 4:23:43 PM (IST)

உலக அழகி சில்லர் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மன்னிப்பு கோரியுள்ளார்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர் இந்த ஆண்டின் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பெற்றோர் இருவரும் டாக்டர்கள். டெல்லியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் பயின்ற இவர், பின்னர் சோன்பேட் நகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

ஏற்கனவே இந்திய அழகி பட்டம் வென்ற இவர் சீனாவின் சானியா நகரில் நடந்த, 2017ம் ஆண்டிற்கான உலக அழகிப்போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றார். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மிகப்பெரிய தவறு என்றும், சர்வதேச அளவில் இந்திய பணத்திற்கு மதிப்பு உள்ளது.

அதனால் தான் சில்லர்கூட உலக அழகியாகிவிட்டார் எனப் பதிவிட்டிருந்தார். அதாவது ஹிந்தியில் சில்லர் என்றால் சில்லறை என்ற அர்த்தம் வரும் வகையில் சசிதரூர் டிவிட்டியிருந்தார். இதற்கு தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தனது செயலுக்காக சசிதரூர் மன்னிப்பு கேட்டுள்ளார். சில்லர் குறித்து தான் விளையாட்டாக கருத்து கூறியதாகவும், யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சசிதரூர் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


Joseph MarketingNew Shape Tailors

Thoothukudi Business Directory