» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நந்தி விருது வழங்கும் விவகாரத்தில் சாதி சாயம் பூசுவது சரியல்ல: ஆந்திர முதல்வர் வேதனை

செவ்வாய் 21, நவம்பர் 2017 11:39:39 AM (IST)

நந்தி விருது வழங்கும் விவகாரத்தில் அரசு மீது சாதி சாயம் பூசுவது சரியல்ல என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரைப்படத் துறையினரை கவுரவிக்கும் வகையில் ஆந்திர அரசு சார்பில் ஆண்டுதோறும் நந்தி விருது வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2014, 15, 16 ஆகிய 3 ஆண்டுகளுக்கு நந்தி விருதுக்கு தேர்வான சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. விரைவில் விருது வழங்கப்பட உள்ளது.

இதனிடையே, நந்தி விருதுக்கு தேர்வு செய்யப்படுவோம் என எதிர்பார்த்து காத்திருந்த பலர் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, தெலுங்கு திரைப்பட உலகில் சர்ச்சை எழுந்துள்ளது. சிரஞ்சீவிக்கு தொடர்புடைய அவரது குடும்பத்தினருக்கு விருதுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் இதுகுறித்து நேற்று கூறும்போது, "நந்தி விருது விவகாரத்தில் இது போன்ற பிரச்சினை எழும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. கலைஞர்களுக்கு விருது வழங்கும் விவகாரத்தில் சாதி பிரச்சினையை எழுப்புவதா? இதில் கூட யாராவது அரசியல் செய்வார்களா? நந்தி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய தனிக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு தான் பட்டியலை இறுதி செய்தது. அப்படி இருக்கும்போது, அரசு எப்படி இதில் தலையிட முடியும்? ஆனால் எதிர்க்கட்சியினரும் திரையுலகை சேர்ந்த சிலரும் இதுகுறித்து பேசுவது வேதனையளிக்கிறது” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing


crescentopticals

New Shape TailorsThoothukudi Business Directory