» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம்!!

திங்கள் 20, நவம்பர் 2017 5:39:18 PM (IST)

கார்த்தி சிதம்பரம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம்  அனுமதி அளித்துள்ளது.

ஐ.என்.எஸ். மீடியாவுக்கு நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதில் முறைகேடாக பணம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அவரது வீட்டில் சோதைனயும் நடத்தப்பட்டது.

இது குறித்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் விசாரணைக்கு ஆஜராகாததை தொடர்ந்து அவரை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்து, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது. இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டது. ஆனால் கார்த்தி சிதம்பரமோ, தான், தனது மகளின் படிப்பு தொடர்பாகவும், பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் நோக்கத்திற்காகவும், இருமுறை இங்கிலாந்து செல்ல வேண்டியுள்ளதால் அதற்காவது அனுமதி தரும்படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. டிசம்பர் 1 முதல் 10ம் தேதி வரை வெளிநாடு செல்ல கார்த்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், வெளிநாடு சென்றால் டிசம்பர் 11ம் தேதி இந்தியாவிற்கு திரும்பிவட வேண்டும் என்றும், பயணத்தை நீடித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
New Shape Tailors

crescentopticals
Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory