» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜிஎஸ்டி வரி: விலை மாற்றத்தை மேற்கொள்ள டிச,31 வரை அவகாசம் : மத்திய அரசு அறிவிப்பு

திங்கள் 20, நவம்பர் 2017 10:24:13 AM (IST)

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பொருட்கள் மீது புதிய விலைப் பட்டியலை ஒட்டுவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலானது. இந்நிலையில், ஜிஎஸ்டி-யால் பொருட்களின் சில்லறை விற்பனை விலையில் (எம்ஆர்பி) திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் வணிகர்கள் செப்டம்பர் 30-ம் தேதி வரை திருத்தம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், திருத்தப்பட்ட விலையை ஏற்கெனவே அச்சிடப்பட்ட விலைக்கு அருகில் தனியாக ஒட்ட வேண்டும். அதை மறைத்து ஒட்டக்கூடாது. பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள எம்ஆர்பி விலைக்கும் ஜிஎஸ்டி-யால் மாற்றியமைக்கப்பட்ட விலைக்கும் உள்ள வித்தியாசம், அப்பொருளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 200-க்கும் அதிகமான பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: விலை மாற்றத்தை மேற்கொள்ள கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் வந்தன. அதன்படி, குறைக்கப்பட்ட விலையை பொருட்கள் மீது ஒட்டுவதற்கு டிசம்பர் 31 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. பொருட்கள் மீது ஏற்கெனவே பழைய விலை ஒட்டப்படிருக்கும் பட்சத்தில், அதன் அருகே புதிய விலைப் பட்டியலை ஒட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads




crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

Joseph Marketing



Thoothukudi Business Directory