» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பள்ளிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த மாணவனை காயப்படுத்திய நிர்வாகிகள் : உ.பி.யில் பரபரப்பு

ஞாயிறு 19, நவம்பர் 2017 12:45:12 PM (IST)

உத்தரபிரதேசத்தில், பள்ளிக்கு சீருடை அணியாமல் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வந்த மாணவனை, பள்ளி நிர்வாகிகள் கத்திரிக்கோலால் குத்தி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் சிங்கந்தர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அனுஜ் குமார் என்ற மாணவன், சீருடை அழுக்காக இருந்ததால் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த தலை மை ஆசிரியர், மாணவன் அனுஜின் பேன்ட்டை கத்திரிக்கோலால் வெட்டினார். 

அப்போது, மாணவனின் இரண்டு கால்களிலும் கத்தரிக்கோல் பட்டு வெட்டுக் காயம் ஏற்பட்டது. பின், அனுஜை, பள்ளி காவலாளியுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.ரத்தக் காயத்துடன் வந்த மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing

New Shape Tailors






Thoothukudi Business Directory