» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குஜராத் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை: ராகுல் விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

சனி 11, நவம்பர் 2017 4:32:36 PM (IST)

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதில் 178 பொருட்களின் வரி குறைக்கப்பட்டதாக விமர்சித்த, ப.சிதம்பரத்துக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். 

குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், 23-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதில் 178 பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து இதற்காக நாம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தான் நன்றி கூற வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்தார். .

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரசாரம் செய்து வரும் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல், பாஜக-வை கடுமையாகச் சாடி வருகிறார். குறிப்பாக அங்கு கட்டப்பட்டுள்ள நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை குஜராத்தில் வசித்து வரும் முக்கிய 10 தொழிலதிபர்களின் பயன்பாட்டுக்கானது என்று விமர்சித்துள்ளார். மேலும், அங்கு தொடர்ந்து வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டு வருவதாகவும், எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்றும் கூறினார். 

இந்நிலையில், குஜராத் தேர்தலை முன்னிட்டு அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நரேந்திர மோடியின் அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரியானது (ஜிஎஸ்டி) அனைத்து கட்சிகளின் அனுமதியோடுதான் அமல்படுத்தப்பட்டது. அதில் உள்ள சிரமங்களை நீக்கி மாற்றத்தை ஏற்படுத்த பாஜக எப்போதும் தயாராக உள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று கூட அதைத் தான் சரியாகச் செய்தார். ஜிஎஸ்டி முறையானது மக்களின் மீதான வரிச்சுமையைப் போக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. 

அதில் அவர்களுக்குத் தேவையான அனைத்து மாறுதல்களும் சரிவரச் செய்யப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதனை அரசியலாக்கி ஆதாயம் தேடுகிறது. மத்திய அரசில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது குஜராத் மாநிலத்துக்கான எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. இங்கு வளர்ச்சி ஏற்படுத்த காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை. அவர்கள் நர்மதை ஆற்றின் குறுக்கே அணை கட்ட எவ்வித முயற்சியிலும் ஈடுபடவில்லை. இந்த அணை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் மொர்ராஜி தேசாய், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் மட்டும்தான் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals

Thoothukudi Business Directory