» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிர்வாக திறமையின்மையை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி கடும் தாக்கு

சனி 11, நவம்பர் 2017 11:58:14 AM (IST)

நிர்வாக திறமின்மையை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறுகையில், ஜிஎஸ்டி எனும் கப்பார் சிங் (கொள்ளையன்) வரியை காங்கிரஸ் அனுமதிக்காது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடங்குவதையும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. வரி மூலம் லட்சக்கணக்கானவர்களின் வேலை வாய்ப்பையும் காங்கிரஸ் அனுமதிக்காது என்று ஒரு டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

மற்றொரு டிவிட்டில், நமது நாட்டுக்கு எளிய வரிவதிப்பு முறை தேவை. அதனை செயல்படுத்தாமல், வெறும் பேச்சிலேயே இந்திய மக்களின் நேரத்தை வீணடிக்காதீர்கள். மோடி அரசு தனது நிர்வாகத்திறமின்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். பிடிவாதத்தை கைவிட்டு, மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


New Shape Tailors


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory