» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி விதிப்பு ? : நிதியமைச்சர் அருண்ஜெட்லி பேட்டி

வெள்ளி 10, நவம்பர் 2017 8:44:16 PM (IST)

நவ.15 முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேட்டியளித்தார்.

கவுகாத்தியில் இன்று 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடை பெற்றது. இதில் 150 பொருட்க ளுக்கு மேல் ஜிஎஸ்டி வரி குறைக்கப்ப ட்டுள்ளது. கூட்டம் முடிந்த பின்னர் பேட்டியளித்த அருண்ஜெட்லி வருமட் நவ.15 முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது என்றார். மேலும் 178 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவிதத்திலிருந்து 18 சதவிதமாக  குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் மார்பிள்ஸ், சாக்லேட், ஷாம்பூ, சோப்பு பவுடர், சோப்பு உள்ளிட்ட 178 பொருட்களுக்கு வரி குறைப்பு. 5 நட்சத்திர ஓட்டல்கள் தவிர்த்து பிற ஓட்டல்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.13 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவிதத்திலிருந்து 12 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது. 6 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 8 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 12%-லிருந்து 5%-ஆக குறைப்பு என்றார். மேலும் 50 பொருட்களுக்கு மட்டும் 28 சதவித ஜிஎஸ்டி வரி தொடரும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





crescentopticals

Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory