» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியிடம் அரசியல் பற்றி பேசவில்லை : துணைமுதல்வர் ஓபிஎஸ் விளக்கம்

வியாழன் 12, அக்டோபர் 2017 1:24:18 PM (IST)

பிரதமர் மோடியிடம், அரசியல் குறித்து பேசவில்லை என துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழக துணை முதல்வ‌ர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர் செல்வத்துக்கும் பனிப்போர் நிலவி வருவதாகவும் இதுகுறித்து முறையிடவே இந்த சந்திப்பு எனவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்ட நிலையில் சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களிம் பேசிய ஓபிஎஸ், முதலமைச்சருக்கும், எனக்கும் மன வருத்தம் ஏற்படவில்லை என்று கூறினார்.சந்திப்பில் பிரதமர் மோடியிடம், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தேவையான நிலக்கரியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD




New Shape Tailors

Joseph Marketing

crescentopticals





Thoothukudi Business Directory