» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜி.எஸ்.டி. யை சீர்குலைக்க நடந்த முயற்சி தோல்வி : அமெரிக்காவில் அருண் ஜெட்லி பேச்சு

புதன் 11, அக்டோபர் 2017 11:32:00 AM (IST)

ஜி.எஸ்.டி. வரி முறையை சீர்குலைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இந்த வரியை எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு விட்டன என்று அமெரிக்காவில் அருண் ஜெட்லி கூறினார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஒரு வார கால பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று காலை நியூயார்க் நகர் சென்றடைந்த அவர், அங்கு இந்திய தொழில் கூட்டமைப்பும், அமெரிக்க வர்த்தக சபையும் கூட்டாக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அருண் ஜெட்லி கூறியதாவது: ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு இந்தியா சுமுகமாக மாறிவிட்டது. இந்த வரி முறையை சீர்குலைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் பல முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால் அவர்கள் கட்சியின் ஆட்சி நடக்கும் மாநிலங்களே அவர்கள் சொன்னதை கேட்கவில்லை. ஏனென்றால், 80 சதவீத வருவாய், மாநிலங்களுக்குத்தான் போகப் போகிறது. அதை இழக்க விரும்பாததால், கட்சி மேலிடம் சொல்வதை அவர்கள் நிராகரித்தனர். வேகமாக இந்த வரி முறைக்கு மாநிலங்கள் மாறிவிட்டன. அவை புத்திசாலிகள். அதனால், இதை சீர்குலைக்க நடந்த முயற்சி தோற்றுவிட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில், 5 சதவீத வரி கூட உள்ளது. எந்த நாட்டிலும் இவ்வளவு குறைவான வரி சதவீதம் இல்லை. ரூ.1 கோடி வரை வர்த்தகம் செய்பவர்களுக்கு சிறப்பு திட்டம் அறிவித்துள்ளோம். 

இளைய தலைமுறையினர் மின்னணு முறையிலான பண பரிமாற்றத்துக்கு மாறிவிட்டனர். அரசின் பல்வேறு மானியங்கள், வங்கி கணக்கு மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாக எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, வர்த்தகம் செய்வதற்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது. வரி குறித்த 99 சதவீத விசாரணைகள் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. பெரிய முடிவுகளை எடுத்து, அதை பெரிய அளவில் அமல்படுத்தக்கூடிய திறன், இந்தியாவுக்கு உள்ளது. சுமார் 250 நெடுஞ்சாலை திட்டங்கள், கட்டுமான நிலையில் உள்ளன. மின்சாரம் உபரியாக உள்ளது. துறைமுகங்களின் கையாளும் திறன் அதிகரித்துள்ளது என அருண் ஜெட்லி பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD




New Shape Tailors




Thoothukudi Business Directory