» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காவல்துறை அதிகாரி நாற்காலியில் பெண் சாமியார்; அருகில் கைகட்டி நின்ற அதிகாரி!

வியாழன் 5, அக்டோபர் 2017 3:48:20 PM (IST)டெல்லி காவல் நிலையத்தில்  அதிகாரிக்குரிய நாற்காலியில் பெண் சாமியார் ஒருவர் அமர்ந்திருக்க, அருகில் போலீஸ் அதிகாரி கையைக் கட்டிக் கொண்டு நின்றிருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

டெல்லி காவல் துறையின் சதாரா மாவட்டத்தின் கீழ் வருவது விவேக் விஹார் காவல்நிலையம். இங்கு இல்லக்காவல் அதிகாரியாகப் பணியாற்றுபவர் சஞ்சய் ஷர்மா. இந்நிலையில் இந்த காவல் நிலையத்தின் இல்லக்காவல் அதிகாரியின் இருக்கையில் டெல்லியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் சாமியாராக ராதே மா அமர்ந்திருக்கும் படங்கள் நேற்று முன்தினம் இணையத்தில் வெளியாகின. 

அந்த படத்தில் சஞ்சய் ஷர்மா இந்து பக்தர்கள் அணிவது போன்ற சிகப்பு நிற சால்வை ஒன்றினை அணிந்து கொண்டு, கைகளை கட்டிக் கொண்டு நிற்கிறார். இந்தப் படம் வெளியானதிலிருந்து இல்லக்காவல் அதிகாரியின் இருக்கையில் பெண் சாமியார் ஒருவரை எப்படி அமர வைக்கலாம் என்று கடும் சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்தன. கடும் கண்டனங்களும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த சம்பவம் குறித்து துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது குறித்து டெல்லி கிழக்குப் பகுதி காவல் துறை இணை ஆணையர் ரவீந்திர யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூடுதல் உதவி ஆணைய பதவி நிலையில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியினைக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் சஞ்சய் ஷர்மா தற்பொழுது டிஸ்ட்ரிக்ட் லைன்ஸ் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றார். பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் பொழுது, "பெண் சாமியார் ராதே மா டெல்லியில் நடைபெற்ற ராம் லீலா நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று கொண்டிருந்ததாகவும், வழியில் இயறக்கை உபாதைக்காக விவேக் விஹார் காவல் நிலையம் வந்ததாகவும் சஞ்சய் ஷர்மா தெரிவித்ததாகக் கூறினார்.


மக்கள் கருத்து

muruganOct 6, 2017 - 08:35:57 PM | Posted IP 223.3*****

நாடு வெளங்கிரும்டா ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

New Shape Tailors

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory