» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமரை விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜூக்கு பாஜக கடும் கண்டனம்

புதன் 4, அக்டோபர் 2017 11:05:19 AM (IST)

கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமரை விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கர்நாடக பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார். இந்த கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதாகவும், ஆனால் இதை கண்டிக்காமல் பிரதமர் மவுனமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி என்னை விட பெரிய நடிகர் என்றும் அவர் குறை கூறினார். பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு கர்நாடக பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கவுரி லங்கேஷ் கொலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தியுள்ளார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எதிரில் அமர்ந்திருந்தவர்களின் கைத்தட்டல்களை பெறுவதற்காக அவர் இவ்வாறு பேசி இருக்கிறார். தனது கம்யூனிஸ்டு கொள்கைகளுக்கு ஏற்றபடி அவர் பேசியுள்ளார். ஒரு நடிகராக அவர் அந்த மேடைக்கு தகுந்தபடி பேசியுள்ளார் என்றே நான் கருதுகிறேன்.

முன்பு காவிரி பிரச்சினை வந்தபோது அவரிடம் கேள்வி கேட்டதற்கு தான் ஒரு நடிகர் மட்டுமே என்று கூறினார். ஆனால் அவர் இன்று கர்நாடகத்தில் நடந்த கொலைகள் பற்றி பிரதமர் பேச வேண்டும் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் ஈடுபட விரும்பினால் அவர் ஒரு கட்சியை ஆரம்பித்துக் கொள்ளட்டும். அதை விடுத்து அவர் பிரதமரை விமர்சிப்பது சரியல்ல. இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

பா.ஜனதாவை சேர்ந்த பிரதாப் சிம்ஹா கூறுகையில், "காவிரி பிரச்சினை பற்றி கேள்வி கேட்டபோது தான் நடிகர் மட்டுமே என்று பிரகாஷ்ராஜ் கூறினார். ஆனால் தற்போது கர்நாடகத்தில் நடந்த கொலை குறித்து பிரதமர் பேச வேண்டும் என்று அவர் கூறுவது சரியல்ல. சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை கையாள்வது மாநில அரசு. அப்படி இருக்கும்போது கர்நாடக காங்கிரஸ் அரசை கேள்வி கேட்க வேண்டியது தானே. இந்த வி‌ஷயத்தில் பிரதமரை ஏன் இழுக்கிறீர்கள்?" என்று கூறினார்.


மக்கள் கருத்து

தமிழன்Oct 4, 2017 - 01:52:44 PM | Posted IP 180.2*****

கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரேசிடம் கேட்கவேண்டிய கேள்வியை எதுக்கு ராசா மோடியிடம் கேட்குற? கம்யூனிஸ்ட் பிரகாஷ் ராஜ் ....

சாமிOct 4, 2017 - 12:10:55 PM | Posted IP 103.5*****

ஏலே - பிக்காத்து ராசு - இதெல்லாம் ஒரு பொழப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Universal Tiles Bazar

Johnson's Engineers
New Shape Tailors

Nalam Pasumaiyagam


CSC Computer Education

selvam aquaThoothukudi Business Directory