» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு: உற்பத்தி வரியை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை

புதன் 4, அக்டோபர் 2017 9:13:44 AM (IST)

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்து உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவை சந்தித்து வந்ததால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தியது. தற்போது, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.21.48–ம், டீசல் மீது லிட்டருக்கு ரூ.17.33–ம் உற்பத்தி வரியாக மத்திய அரசு வசூலித்து வருகிறது. இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கும் நடைமுறை, கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதிலிருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூலை 4-ம் தேதியில் இருந்து இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.80–ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.70–ம் அதிகரித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை சரிந்தபோது, உற்பத்தி வரியை உயர்த்திய மத்திய அரசு, இப்போது உற்பத்தி வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு வழிவகுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை நேற்று மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. இந்த விலை குறைப்பு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான சில்லரை விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வரி குறைப்பு செய்யப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. வரி குறைப்பு காரணமாக, நடப்பு நிதியாண்டின் மீதி காலத்தில் மத்திய அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி வரி குறைப்புக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு தலா ரூ.2 குறைகிறது. இந்த விலை குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.


மக்கள் கருத்து

உண்மைOct 4, 2017 - 05:52:44 PM | Posted IP 122.1*****

அடேய் சயசங்கு மூடனே! உனக்கு மூடர் கூடாரத்தில் சிங்கி தட்டுவதை தவிர என்ன தெரியும்? நீ தமிழனும் அல்ல இந்தியனும் அல்ல நீ ஒரு அகதி!

உண்மைOct 4, 2017 - 04:56:53 PM | Posted IP 122.1*****

அய்யா ஒருவன் எனும் வேசி மூடனே நீ வெளிநாட்டு விருந்தாளிக்கு பிறந்த பய!

ஒருவன்Oct 4, 2017 - 03:48:07 PM | Posted IP 117.2*****

டேய் உண்மை என்ற மோடி அடிமையே, சிலிண்டர் விலையை உயர்த்தி பெட்ரோலுக்கு விலை குறைச்சான் ,, உனக்கு என்னடா தெரியும் ?? மானங்கெட்ட (பிஜேபி) வடை நாட்டு பீசப்பி யின் அடிமை...

பாலாOct 4, 2017 - 01:46:54 PM | Posted IP 61.14*****

ஹலோ மஸ்தான்ஆட்சிக்கு வரும்போது பெட்ரோல் விலை மனதில் கொண்டு நன்றி சொல்லவும்...

உண்மைOct 4, 2017 - 01:11:00 PM | Posted IP 122.1*****

மோடி அரசிற்கு நன்றி!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

New Shape Tailors
Johnson's EngineersThoothukudi Business Directory