» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு மார்ச் வரை சேவை கட்டணம் ரத்து

புதன் 4, அக்டோபர் 2017 9:10:28 AM (IST)

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் ரத்து மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 வரை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த நவம்பர் மாதம், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும்வகையில், இந்த சேவை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 

ஜூன் 30-ம் தேதிவரையும், பிறகு செப்டம்பர் 30-ம் தேதிவரையும் சேவை கட்டண விலக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சேவை கட்டண விலக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதம்வரை ரயில்வே வாரியம் நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை கட்டண விலக்கு காரணமாக, ரயில்வேக்கு இதுவரை ரூ.184 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsNew Shape Tailorscrescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Johnson's EngineersThoothukudi Business Directory