» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரபல நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் : நடிகர் திலீப்புக்குக் கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன்

செவ்வாய் 3, அக்டோபர் 2017 4:46:53 PM (IST)

பிரபல நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்குக் கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

கொச்சி அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டு திரும்பிய கேரள நடிகை, ஒரு கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நடிகர் திலீப்பை போலீஸார் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில், முதலாவதாக திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிறகு, மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் சார்பில் ஜாமீன் கோரி 2-வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நிலவரம் தற்போது முழுவதும் மாறி விட்டதாகவும், பாலியல் கொடுமைச் சம்பவ சதியில் தனக்கு சதியோ அல்லது அதில் தொடர்போ இல்லை என்றும் தீலிப் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த மனுவையும் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் 3-வது முறையாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் திலீப். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. நடிகையைக் கடத்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தால் பல்சர் சுனில் தலைமையிலான கூலிப்படைக்கு ரூ. 1.50 கோடியும் காவல்துறையிடம் சிக்கினால் இது இரண்டு மடங்காகி ரூ. 3 கோடி தருவதாகவும் திலீப் உறுதியளித்துள்ளதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. 

இந்நிலையில் இன்று, கேரள உயர் நீதிமன்றம் திலீப்புக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. திலீப், தன்னுடைய கடவுச்சீட்டை ஒப்படைக்கவேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 85 நாள்களுக்குப் பிறகு ஜாமீன் பெற்றுள்ளார் திலீப்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

New Shape Tailors

crescentopticalsThoothukudi Business Directory