» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அலகாபாத் பல்கலைக்கழகம் அருகே மாயாவதி கட்சி தலைவர் சுட்டுக்கொலை : வன்முறை வெடித்தது

செவ்வாய் 3, அக்டோபர் 2017 4:16:21 PM (IST)அலகாபாத் பல்கலைக்கழகத்திற்கு அருகே மாயாவதி கட்சியின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு வன்முறை வெடித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் விடுதி அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ராஜேஷ் யாதவ் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜேஷ் யாதவ் அவருடைய நண்பர் டாக்டர் முகுல் சிங்கை சந்தித்து பேச சென்று உள்ளார், அப்போது அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் நேரிட்டு உள்ளது. இதனையடுத்து அவரை கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டுள்ளது. காயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவருடை ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறையாளர்களால் சாலையில் சென்ற 2 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், கடைகள் நொறுக்கப்பட்டது. மருத்துவமனையும் பகுஜன் சமாஜ் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் ராஜேஷ் யாதவ். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing
crescentopticals

New Shape Tailors
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory