» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரோஹிங்கயா அகதிகள் இந்தியாவில் தங்க அனுமதி அளிக்கக் கூடாது: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர்

செவ்வாய் 3, அக்டோபர் 2017 10:31:55 AM (IST)

மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கயா அகதிகளை இந்தியாவில் தங்க அனுமதிக்கக் கூடாது என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

மியான்மரைச் சேர்ந்த சிறுபான்மையின முஸ்லிம்களான ரோஹிங்கயா இனத்தவர், அந்நாட்டு ராணுவ நடவடிக்கை காரணமாக இந்தியாவில் பெருமளவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் பயங்கரவாத சதிகளுக்கு துணைபோவதால், அவர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் மத்திய அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் பையாஜி ஜோஷி பேசியதாவது: பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது மதம் சார்ந்த விஷயமல்ல. அது நாட்டின் பொருளாதாரம் சார்ந்த விஷயமும் கூட. நாட்டின் வேளாண்மை உற்பத்தியிலும், பொருளாதாரத்திலும் பசுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில் பசுக்களை காரணமாக வைத்து சட்டத்தைக் கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ரோஹிங்கயா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுவியர்களாவர். அங்கு ஹிந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். ஒரு பிரிவு ரோஹிங்கயாக்கள் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவி அங்கு முகாம்கள் அமைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அவர்களை மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டுமென்று இங்கு சிலர் கூறுகின்றனர். நமது நாட்டு மக்களின் பாதுகாப்பு, உயிரைவிட ரோஹிங்கயாக்களை விருந்தினர்களாக நடத்துவது மிகவும் முக்கியமா?

உலகில் வேறு எந்த நாடாவது, பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக பல ஆண்டுகள் தங்கியிருக்க அனுமதிக்குமா? ரோஹிங்கயாக்களால் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளதை வரவேற்கிறேன். அவர்களில் பலர் பாகிஸ்தானுக்கு உளவாளிகளாகவும், பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயல்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்றவர்கள் நமது நாட்டில் அனுமதிக்கக் கூடாது.

இந்த தீபாவளிப் பண்டிகையின்போது இந்திய மக்கள் அனைவரும் வெளிநாட்டுப் பொருள்களை, முக்கியமாக சீனத் தயாரிப்புகளை முழுமையாகத் தவிர்த்துவிட்டு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றார். சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape TailorsJoseph Marketing

crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory