» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வரி வருமானம் உயரும் போது ஜிஎஸ்டி குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ஜேட்லி சூசகம்

திங்கள் 2, அக்டோபர் 2017 5:19:17 PM (IST)வரி வருமானம் உயரும் போது ஜிஎஸ்டி குறைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். 

67-வது பிரிவு இந்திய வருவாய் அதிகாரிகளின் பயற்சி நிறைவு நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மேலும் கூறியதாவது: ஜிஎஸ்டியில் மேம்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. சிறிய அளவில் வரி செலுத்துபவர்களின் பிரச்சினைகளைக் கவனத்தில் எடுத்து அதனைக் குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி மூலம் அதிகளவில் வருமானம் கிடைக்கும் போது, ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைக்கலாம். அரசாங்கத்தின் உயிர் நாடி வரி வருமானம் ஆகும். 

இதன் மூலமே வளர்ச்சி அடையும் நாடு என்னும் இடத்தில் இருந்து வளர்ந்த நாடு என்னும் நிலைமையை அடைய முடியும். வரி செலுத்தாத சமூகத்தில் இருந்து தற்போதுதான் வரி செலுத்தும் சமூகமாக மாறி வருகிறோம். இதற்காகவே வரியை ஒருமுகப்படுத்தினோம். இந்த மாற்றம் முழுமையடைந்து, வருமானம் சீராக இருக்கும் பட்சத்தில் வரியை குறைக்க முடியும். மறைமுக வரி என்பது அனைவரும் செலுத்துவது. அதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு மறைமுக வரி குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறிய ஜேட்லி, வருவாய்துறை பயற்சி முடித்த அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


New Shape Tailors

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory