» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உபி அரசின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம்

திங்கள் 2, அக்டோபர் 2017 5:12:53 PM (IST)

உபி அரசின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.

உலகின் ஏழு அதிசயங்களில்  இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்து உள்ள தாஜ்மகாலும் ஒன்றாகும். ஆனால் அந்த மாநிலத்தின்  சுற்றுலா கையேட்டில்  தாஜ்மகால் பெயர் இடம் பெற வில்லை. உத்திரப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக அச்சிடப்பட்டுள்ள இந்த சுற்றுலா கையேட்டில்  புகழ் பெற்ற கங்கா ஆரத்தியை அட்டைபடமாக கொண்டு உள்ளது.

ஆனால் மாநிலத்தின் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் தாக்மகாலின் பெயர்  காணப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள தாஜ்மகாலை காண 60 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகின்றனர். இந்த மாநிலத்திற்கு இதன் மூலமே அதிகபடியான வருவாய் வருகிறது. கடந்த ஜூன் மாதம்  உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதியானந்த்  கூறும் போது: "நமது இந்தியா கலாச்சாரத்திற்குடபட்டது  ராயாமணமும் கீதையும் தான் தாஜ்மகால் அல்ல" என குறிப்டுபிட்டு  இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTDNew Shape Tailors


Thoothukudi Business Directory