» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் : நடப்பு கல்வியாண்டில் அமல்!

திங்கள் 2, அக்டோபர் 2017 12:38:58 PM (IST)

சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற மட்டுமே இதுவரை ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதன்படி 2017-18 கல்வியாண்டு முதல் தேர்வுகளை எழுத 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளும் தங்கள் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆதார் எண் உட்பட அனைத்து ஆவணங்களையும் சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆதார் எண் இல்லாத மாணவர்கள் தங்கள் ஆதார் எண்ணின் பதிவெண்ணை வழங்கலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வு எழுத முதல்முறையாக ஆதார் தகவல்களை சமர்ப்பிக்க சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdscrescentopticalsNew Shape Tailors

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory