» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 149-வது பிறந்த நாள் : நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

திங்கள் 2, அக்டோபர் 2017 11:22:40 AM (IST)மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமா் மோடி மலா் தூவி மாரியாதை செலுத்தினார்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 149-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தூய்மை இந்தியா உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவரும் பிரதமா் நரேந்திர மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மலா்தூவி மாரியாதை செலுத்தினார். இதனைத் தொடா்ந்து முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் பிறந்த நாளான இன்று அவருக்கும் அஞ்சலி செலுத்தினார். 

இது தொடா்பாக அவா் தனது டுவிட்டா் பக்க பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், காந்தி ஜெயந்தியன்று பாபுவை தலைவணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் 149-வது பிறந்த நாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பாஜக மூத்த தலைவர் அத்வானி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDNew Shape Tailors

crescentopticals

Joseph Marketing


Thoothukudi Business Directory