» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்

சனி 12, ஆகஸ்ட் 2017 5:39:46 PM (IST)

மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து வித்யாபாலன் கூறியதாவது: மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக  சேர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் திறமைகளை சிறந்த ஒரு உறுப்பினர் என் பொறுப்புகளை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறேன். நான் இந்த புதிய அனுபவத்தை எதிர்நோக்குகிறேன். இன்று நாம் வாழும் சமுதாயத்தின் சிக்கல்கள், உணர்திறன்கள், யதார்த்தங்களை எங்கள் சினிமாக்கள்  பிரதிபலிக்க அனுமதிக்கும் அற்புதமான கட்டமாகும் என கூறினார்.

மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பாலக் நிஹலனி பதவி நீக்கம் செய்யப்பட்டு  எழுத்தாளர் பிரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். கவுதமி, நரேந்திர கோலி, நரேஷ் சந்திர லால், நீல் ஹெர்பெர்ட் நொங்ரிக், விவேக் அக்னிஹோத்ரி, வேமான் கெந்த்ரே, டி.எஸ் நாகபிரான, ரமேஷ் பட்டேஜ்ம்,வாணி திரிபாதி டிக்கோ, ஜீவிதா ராஜசேகர, மிஹிர் பூதா  ஆகிய உறுப்பினர்களுடன் வித்யாபாலன் இணைந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers

Nalam Pasumaiyagam

New Shape Tailors


Universal Tiles Bazar



selvam aqua




Thoothukudi Business Directory