» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாட்டு நாய்கள் இனவிருத்தி மையத்தை மூடும் உத்தரவுக்கு இடைக்கால தடை நீடிப்பு

சனி 12, ஆகஸ்ட் 2017 11:00:21 AM (IST)

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நாட்டு நாய்கள் இனவிருத்தி மையத்தை மூடும் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் போன்ற தமிழகத்தின் பூர்வீக நாய்களின் இனத்தை பாதுகாக்கவும், அந்த நாய்களின் இனத்தை பெருக்கவும் சென்னை சைதாப்பேட்டையில் நாய்கள் இனவிருத்தி மையத்தை 1980–ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடைத்துறை தொடங்கியது. இந்த மையத்தை கடந்த 2013–ம் ஆண்டு ஆய்வு செய்த இந்திய விலங்குகள் நல வாரிய அதிகாரிகள், இந்த மையம் இந்திய விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை, விதிமுறைகளை பின்பற்றி நாய்களை பராமரிக்கவில்லை என்றும் கூறி மையத்தை இழுத்து மூட உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, இந்த மையத்தை மூடிவிட்டு அங்குள்ள நாய்களை சிகிச்சைக்காக தங்கள் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரி பீட்டா என்ற விலங்குகள் நல தொண்டு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2 மாதங்களுக்குள் சைதாப்பேட்டையில் உள்ள நாய்கள் இனவிருத்தி மையத்தை அரசு மூட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த பிப்ரவரி 13–ந் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததோடு, விளக்கம் கோரி பீட்டா அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல்கள், பீட்டா அமைப்பினர் மிகவும் தாமதமாக பதில் மனுவை தாக்கல் செய்ததால் அதனை படிக்க போதிய அவகாசம் கிட்டவில்லை என்றும், எனவே எதிர் பதில்மனு தாக்கல் செய்ய தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடித்து உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Pop Up Here



New Shape Tailors

Nalam Pasumaiyagam


CSC Computer Education



selvam aqua

Black Forest Cakes

Universal Tiles Bazar

Johnson's Engineers



Thoothukudi Business Directory