» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சசிகலா நியமனம் செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி புதிய மனு

வெள்ளி 11, ஆகஸ்ட் 2017 5:48:39 PM (IST)

சசிகலா நியமனம் செல்லாது என அறிவிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பன்னீர்செல்வம் அணியினர் புதிய மனு ஒன்றை தாக்க செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்றுநடந்த கூட்டத்தில் டி.டி.வி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. டி.டி.வி தினகரனால் கட்சியின் எந்த பதவியையும் வகிக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இன்று டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணயத்திடம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். 

அதில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும், பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ஓபிஎஸ் அணியைச் சாரந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியதாவது: தினகரன் துணை பொதுச்செயலாளராக பதவி வகிக்க இயலாது என்ற தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தோம் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Nalam Pasumaiyagam


Johnson's Engineers


Universal Tiles Bazar

CSC Computer Education

selvam aqua

New Shape Tailors



Thoothukudi Business Directory