» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சீன நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

வெள்ளி 11, ஆகஸ்ட் 2017 11:36:15 AM (IST)

சீனாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த செவ்வாய்கிழமை அன்று 6.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நூற்றுக் கணக்கானோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில், சீன நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சீனாவில் உள்ள வெய்போ இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பேரழிவு தன்னை கவலையில் ஆழ்த்தியதாகவும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இந்திய மக்கள் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியா-சீனா இடையேயான எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி சீன நிலநடுக்கத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

உண்மைAug 11, 2017 - 04:00:12 PM | Posted IP 59.99*****

இந்தியாவில் இருக்கும் தேசவிரோதிகள் தீவிரவாதிகள் ஊழல்பேர்வழிகள் மதமாற்றிகளுக்கு எங்கள் மோடி-ஜி சிம்ம சொப்பனம்! பேரை கேட்டாலே சும்மா அதிருத்துள்ள!

tamilanAug 11, 2017 - 02:34:37 PM | Posted IP 117.2*****

இந்திய மக்களை பத்தி கவலை பட மாட்டார் ......நம்ம சார் .....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Adscrescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

Johnson's EngineersThoothukudi Business Directory