» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெங்கய்யா நாயுடு வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து

சனி 5, ஆகஸ்ட் 2017 11:17:08 PM (IST)



குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்யா நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசு துணை தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவி காலம் வரும் 10-ம் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து புதிய குடியரசு துணை தலைவருக்கான தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியும்  தேர்தலில் போட்டியிட்டனர்.

இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டும் வாக்களித்தனர்.வாக்கு பதிவிற்கான மொத்தமுள்ள 785 வாக்குகளில் 711 வாக்குகள் பதிவாகின. இதில், பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஐ.யூ.எம்.எல். கட்சிகளின் தலா 2 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை.  திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 8 எம்.பி.க்களும் வாக்களிக்கவில்லை.  11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெங்கய்யா நாயுடு வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரதீய ஜனதா வேட்பாளர் வெங்கய்யா நாயுடு 516 வாக்குகளும், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகளும் பெற்றுள்ளனர். குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்யா நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Pop Up Here

Universal Tiles Bazar

CSC Computer Education

Johnson's Engineers

New Shape Tailors



selvam aqua




Thoothukudi Business Directory