» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சர்வதேச நீதிமன்றத்தால் ஜாதவ் குடும்பத்திற்கு நிம்மதி கிடைத்துள்ளது: சுஷ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி

வியாழன் 18, மே 2017 5:43:46 PM (IST)

குல்பூஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது, அவரது குடும்பத்திற்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அதன்பின்னர் கடந்த 15ஆம் தேதி விசாரணை தொடங்கியது. அப்போது, ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்று இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியா வேண்டுகோள் விடுத்தது.பாகிஸ்தான் தரப்பில் வாதாடும்போது, இந்தியாவின் முறையீடு தேவையற்றது என்று குற்றம்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், குல்பூஷன் யாதவ் மரணதண்டனையில் பாகிஸ்தான் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியது.

2008ம் ஆண்டு சட்டவிதிகள்படி பாகிஸ்தான் ஆதராங்கள் போதுமானதாக இல்லை என்று பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவ் தூக்கு தண்டனையை ஆகஸ்ட் மாதம் வரை தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவை தூக்கிலிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குல்பூஷண் யாதவ் மரணதண்டனை வழக்கில் சர்வேதேச நீதிமன்றத்தில் இந்தியாவிற்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் குல்பூஷன் ஜாதவ் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் நிம்மதி கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் வாதத்தை சரியான முறையில் எடுத்து வைத்த ஹரிஷ் சால்வேவிற்கு பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam

New Shape Tailors

Sterlite Industries (I) Ltd

selvam aqua



CSC Computer Education

Johnson's Engineers


Universal Tiles Bazar




Thoothukudi Business Directory