» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடிகர் அமிதாப் போல சிந்தனைத் திறனற்றவர் ரஜினிகாந்த் : முன்னாள் நீதிபதி கட்ஜூ தாக்கு

வியாழன் 18, மே 2017 1:33:12 PM (IST)

நடிகர் அமிதாப் பச்சனைப் போல சிந்தனைத் திறனற்றவர் ரஜினிகாந்த் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக, தனது ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். மொத்தம் 5 நாட்கள் இந்த சந்திப்பு நடக்கிறது. இந்த நிலையில், முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக்கில் மேற்கண்ட விமரிசனத்தைப் பதிவு செய்துள்ளார். 

அதில், தமிழர்கள் மீது நான் மிகுந்த மதிப்புக் கொண்டுள்ளேன். ஆனால், திரை நட்சத்திரங்களைக் கொண்டாடும் தமிழர்களின் செயல் புதிராக உள்ளது. ஏராளமான தென்னிந்தியர்கள், ரஜினிகாந்த்துக்கு தீவிர ரசிகர்களாக உள்ளனர். பலரும், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், தமிழக முதல்வராக வர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

ஆனால், ரஜினிகாந்திடம் என்ன திட்டம் உள்ளது? இந்தியாவின் முக்கியப் பிரச்னையான வறுமை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க ரஜினிகாந்த் ஏதேனும் திட்டம் வைத்துள்ளாரா? நிச்சயமாக இல்லை என்றே நான் நினைக்கிறேன். பொது மக்கள் நலனுக்காக எந்த திட்டமும் இல்லாத ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழர்கள் விரும்புவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை என தெரிவித்துள்ள கட்ஜூ நடிகர் அமிதாப் பச்சனைப் போல சிந்தனைத் திறனற்றவர் ரஜினிகாந்த் என்று கட்ஜு கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

sundarமே 22, 2017 - 10:16:03 AM | Posted IP 27.62*****

கூமுட்டை ரஜினி

ஒருவன்மே 20, 2017 - 11:56:01 AM | Posted IP 117.2*****

saamy அவர்குளுக்கு யாரு கூ முட்டை ?? கூ மொட்டை ரசினி யா ???

saamyமே 19, 2017 - 11:10:37 AM | Posted IP 59.89*****

போடா கூமுட்டை

ஏமுததுமே 19, 2017 - 10:43:37 AM | Posted IP 117.2*****

1௦௦பெர்ஸன்ட்கரெக்ட்

ஒருவன்மே 18, 2017 - 05:36:12 PM | Posted IP 117.2*****

சரி தான் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



New Shape Tailors


crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD





Johnson's Engineers



Thoothukudi Business Directory