» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விரைவில் துணை மாவட்டஆட்சியராகிறார் பி.வி. சிந்து : ஆந்திர மாநிலஅரசு முடிவு

புதன் 17, மே 2017 7:14:38 PM (IST)

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு துணை மாவட்ட ஆட்சியர் பதவி வழங்க ஆந்திர மாநிலஅரசு முடிவு செய்துள்ளது. 

பேட்மின்டன் வீராங்கனையான பி.வி.சிந்து சர்வதேச பட்டியலில் மூன்றாவது இடத்தில் நிற்பவர். ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்காக முதல் வெள்ளிப் பதக்கம் பெற்று வந்தவர். சிந்துவுக்கு ஆந்திர மாநில அரசு ஏற்கனவே ரூ.3 கோடி பரிசு தொகையும், அமராவதியில் 1000 சதுர அடி வீடும் வழங்கி இருந்தது. இதற்கிடையே பி.வி.சிந்துவுக்கு துணை மாவட்ட ஆட்சியர் பதவி வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு தேவையான சட்ட திருத்த மசோதா ஜி.எஸ்.டி.க்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்த பிறகு பி.வி.சிந்து துணை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers

Nalam Pasumaiyagam


Pop Up Here

Universal Tiles Bazar

CSC Computer Education

selvam aqua



New Shape Tailors


Black Forest Cakes



Thoothukudi Business Directory