» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் தேர்வில் குளறுபடிகள் விவகாரம் : சி.பி.எஸ்.இ-க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

புதன் 17, மே 2017 1:49:49 PM (IST)

நீட் தேர்வின்போது, மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன விவகாரத்தில், மனித உரிமை ஆணையம் சி.பி.எஸ்.இ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நீட் தேர்வு கடந்த 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.  இந்தத் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ ஆணையம், முறைகேடுகளைத் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதனிடையே, நீட் தேர்வின்போது கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், தேர்வு எழுதவந்த மாணவியின் உள்ளாடையை அகற்றுமாறு கண்காணிப்பாளர் உத்தரவிட்டது, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்தச் சம்பவத்துக்கு விளக்கம் அளித்த சி.பி.எஸ்.இ, சில கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வமிகுதியால் இவ்வாறு நடந்துவிட்டது என்று குறிப்பிட்டது.  இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் சி.பி.எஸ்.இ-க்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers



crescentopticals




Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors





Thoothukudi Business Directory