» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிபிஐ சோதனை... ப.சிதம்பரம், லாலுவுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல: ஜெட்லி

புதன் 17, மே 2017 11:16:35 AM (IST)

ப.சிதம்பரம், லாலுவுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. நேற்று சோதனை நடத்தியது. அது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: சிபிஐ சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. ஏற்கனவே நடந்து வரும் விசாரணையின் தொடர்ச்சிதான் இந்த நடவடிக்கை. கணிசமான ஆதாரம் இருந்தால்தான், வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் சோதனையோ அல்லது இதர நடவடிக்கையோ எடுக்கும். உயர் பதவி வகித்தவர்கள், கணக்கில் காட்டப்படாத பணத்தை மறைக்க போலி நிறுவனங்களை பயன்படுத்துகிறார்கள். அவர்களை விட மாட்டோம். அவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Nalam Pasumaiyagam


CSC Computer Education

New Shape Tailors


Universal Tiles Bazar

selvam aqua

Sterlite Industries (I) Ltd


Johnson's Engineers



Thoothukudi Business Directory